×

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் இரண்டாவது முறையாக நிரம்பிய மருதாநதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி


பட்டிவீரன்பட்டி: அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள மருதாநதி அணை இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி உள்ளது. இந்த அணையின் உயரம் 74 அடியாகும். இந்த அணை மூலம் நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 2 தாலுகாக்களை சேர்ந்த 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி பேரூராட்சி, சித்தரேவு, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்து அணை 73 அடியை எட்டி இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. அணைக்கு வரும் 20 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 83 மில்லியன் கனஅடியாக உள்ளது. அணை நிலவரத்தை பொறியாளர் கண்ணன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மருதாநதி அணை இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் இரண்டாவது முறையாக நிரம்பிய மருதாநதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Marudhanadi Dam ,Pattiveeranpatti ,Maruthanadi ,Ayyampalayam ,Dindigul District ,Dinakaran ,
× RELATED சித்திரை திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு