×

நடப்பாண்டும் பணிநீக்க நடவடிக்கை இருக்கும்: கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை


வாஷிங்டன்: வரும் மாதங்களிலும் பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என ஊழியர்களுக்கு கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் உள்ள தனது ஊழியர்களில் 12,000 பேர் அல்லது 6 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. 2023 செப்டம்பரில் உலக அளவில் அந்நிறுவனத்தில் 1,82,381 பேர் இருந்தனர். கூகுள் வரலாற்றிலேயே இந்த பணிநீக்க நடவடிக்கை மிகப்பெரியது என்றாலும் நிறுனத்துக்கு இது மிகவும் இன்றியமையாதது என்று சுந்தர் பிச்சை முன்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வரும் மாதங்களிலும் பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியிருப்பதாக ‘தி வெர்ஜ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆல்பபெட் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் நடப்பாண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தில் ஆட்குறைப்பு 9 இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்று கூறினார். ஆல்பபெட் நிறுவனத்தில் பல ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் முன்னறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணிச் சுமைகளை குறைக்க செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் LIVE தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் காரணமாக ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

The post நடப்பாண்டும் பணிநீக்க நடவடிக்கை இருக்கும்: கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை appeared first on Dinakaran.

Tags : Google ,Washington ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் முதலீடு: வாரன் பஃபெட் விருப்பம்