×

வரும் 22ம் தேதி பிரதிஷ்டை: அயோத்தி கோயில் கருவறைக்குள் ராமர் சிலை


அயோத்தி: அயோத்தி கோயில் கருவறைக்குள் ராமர் சிலை கொண்டு வரப்பட்டது. வரும் 22ம் தேதி பிரதிஷ்டை நடைபெறுகிறது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22ம் தேதி விமரிசையாக நடக்கிறது. பிரதமர் மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் நேற்று முன்தினம் தொடங்கின. இந்த சடங்குகளை 121 ஆச்சார்யார்கள் மேற்கொண்டனர். வரும் 22ம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, பகல் 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடக்கிறது. இந்நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலை கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. கிரேன் இயந்திரம் மூலம் ராமர் சிலை கருவறைக்குள் வைக்கப்படுவதற்கு முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முக்கியமானவர்கள் மட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post வரும் 22ம் தேதி பிரதிஷ்டை: அயோத்தி கோயில் கருவறைக்குள் ராமர் சிலை appeared first on Dinakaran.

Tags : Consecration on ,Ram ,Ayodhya temple ,Ayodhya ,Moolavar ,idol ,Ayodhya, Uttar Pradesh ,
× RELATED ராமர் கோயிலால் பாஜவுக்கு ஆதாயம் கிடைக்காது: சரத் பவார் பேட்டி