×

சாலையில் மழைநீருடன் கழிவுநீர் தேக்கம்: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகார்

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சி தலைவர் ஜெயந்தி சுயம்பிரகாஷ் தலைமையில் பொதுமக்கள் வட்டாட்சியர் செந்தில்குமாரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதன் விவரம் வருமாறு: பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்த ஊராட்சி அலுவலகம் செல்லும் ஐயன்குளம் சாலையில் அமைந்துள்ள கல்வெட்டு வழியாக மழைநீர் வடிகாலாக இருந்துவந்தது. வீட்டிற்கு முன்பு மழைநீர் வராமல் தடுப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் குடும்பத்தினர் அந்த கல்வெட்டு பாதையை மழைநீர் செல்லாதவாறு அடைத்து வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் கழிவு நீர் கலந்து சாலையில் தேங்கியுள்ளது. இது தொடர்பாக கேட்டால் தனிநபர் குடும்பத்தினர் தகராறு செய்து வருகின்றனர். இதனால், இவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலைமை ஏபட்டுள்ளது. அதோடு, மழை நீருடன் கழிவு நீர் கலந்ததால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதியில் கல்வெட்டு பாதையை வருவாய் துறையினர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மனு மீது பரிசீலனை செய்வதாக வட்டாட்சியர் தெரிவித்தார். மேலும், அளவையருடன் அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதேபோல், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மப்பேடு காவல் நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….

The post சாலையில் மழைநீருடன் கழிவுநீர் தேக்கம்: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Kadambathur Parendra Union Bharambakkam ,Parenthi Suyambarakash ,Chief Minister ,Jayanti Suyambarakash ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி