×

பிரதமர் மோடி வருகை எதிரொலி: சென்னையின் பல்வேறு பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம்..!!

சென்னை: பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணாசாலை, எஸ்.வி. பட்டேல் சாலை, ஜி.எஸ்.டி.சாலைகளை தவிர்த்து மாற்று பாதையில் செல்ல காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஹண்டர்ஸ் சாலையில் இருந்து ஈவெரா சாலையை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்படும். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச்சில் திரும்பி அண்ணாநகர் வழியாக செல்லலாம். வடசென்னையில் இருந்து பாரிமுனை செல்ல ஸ்டான்லி, மூலக்கொத்தளம் வழியாக திருப்பி விடப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

The post பிரதமர் மோடி வருகை எதிரொலி: சென்னையின் பல்வேறு பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,Annasalai ,S.V. ,Patel road ,GST ,Hunters Road ,Evera Road ,PM ,
× RELATED 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி...