×

காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் 92வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது

டெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் 92வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது. காணொலி மூலம் நடந்துவரும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், தலைமை பொறியாளர் சுப்பிரமணியம் பங்கேற்றனர்.

இதில் முன்னதாக கடந்த மாதம் 19ம் தேதி நடந்த கூட்டத்தில் டிசம்பர் மாதம் முழுவதும் வினாடிக்கு 3128 கனஅடியும், அதே போன்று, ஜனவரி முழுவதும் வினாடிக்கு 1030கனஅடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. மேலும் ஜனவரி மாதம் முதல் நாளில் இருந்து விநாடிக்கு 1,003 கனஅடி நீர் திறக்குமாறும் அறிவுறுத்தி இருந்தனர். காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது.

மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம், தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுகிறதா என்பதையும் கண்காணிக்கிறது. காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது.

The post காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் 92வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Kaviri Water Governance Committee ,Vineet Gupta ,Delhi ,meeting ,Tamil Nadu ,Karnataka ,Kerala ,Puducherry ,Supramanian ,Kaviri Technical Committee ,Dinakaran ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...