×

பட்டிவீரன்பட்டி அருகே கோயில் திருவிழா ஆயிரம் அரிவாள் காணிக்கை

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் காணிக்கையாக ஆயிரக்கணக்கான அரிவாள்களை செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் உள்ள சுமார் 600 ஆண்டுகள் பழமையான ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பண்ணசாமி கோயிலில் ஆண்டுதோறும் தை 3ம் தேதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இக்கோயிலில் வேண்டுதல் நிறைவேறினால் பக்தர்கள் காணிக்கையாக அரிவாள் வழங்குவது வழக்கம். பக்தர்களுக்கு அரிவாள்களை செய்து கொடுப்பதற்காக இந்த ஊரில் 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு அரிவாள்கள் சுமார் 2 அடி முதல் 20 அடி வரை செய்யப்படுகின்றன.

தை 3ம் தேதியான நேற்று நடந்த திருவிழாவையொட்டி அரிவாள்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான அரிவாள்களை கோயில் சாமியாடிகள், பூசாரிகள் மற்றும் விரதமிருந்த பக்தர்கள் மேளதாளம் மற்றும் வாணவேடிக்கைகள் முழங்க ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பின் அரிவாள்கள் கோட்டை கருப்பணசாமி கோயிலில் வைக்கப்பட்டது. இத்திருவிழாவில் தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

The post பட்டிவீரன்பட்டி அருகே கோயில் திருவிழா ஆயிரம் அரிவாள் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Temple festival ,Pativeeranpatty ,festival ,Bativeeranpatty ,Ariwal Fort ,Mutulapuram ,Dindigul district ,Karuppanasamy Temple ,
× RELATED புகழ்பெற்ற வேலூர் குடியாத்தம்...