×

வனதிருப்பதி கோயிலில் பரிவேட்டை நிகழ்ச்சி

உடன்குடி, ஜன. 18: குரும்பூர் அருகேயுள்ள புன்னை நகர் வனதிருப்பதியில் நிவாசபெருமாள் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு கோயிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு கோ பூஜை, 6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 8 மணிக்கு மூலந்திர ஹோமம், 9 மணிக்கு காலசந்தி பூஜை, திருவாதரணம், சாந்து முறை கோஷ்டி நடந்தது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் நிவாசபெருமாள் பரிவேட்டைக்கு புறப்படுதல், இரவு 8.30 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் அனைவருக்கும் ரவா கேசரி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஓட்டல் சரவணபவன் பங்குதாரர் சரவணன் ஆலோசனைப்படி கோயில் மேலாளர் வசந்தன் செய்திருந்தார்.

The post வனதிருப்பதி கோயிலில் பரிவேட்டை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Vanathirupathi ,Udengudi ,Punnai Nagar ,Kurumpur ,Go ,
× RELATED உடன்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது