×

எம்.ஜி.ஆர் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவி

செங்கோட்டை,ஜன.18: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின் பேரில் கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூரில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமில் சங்கரன்கோவிலை சேர்ந்த அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளரும், ஏ.வி.கே. கல்வி குழும தலைவருமான அய்யாத்துரை பாண்டியன், அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் இனிப்பு, அரிசி, பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஈழ தமிழர்களுடன் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாடி சிறப்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடையநல்லூரை சேர்ந்த சவுதி அரேபியா ஜெ.பேரவை செயலாளர் மைதீன், நாட்டாமை பிரான்சிஸ், ஓய்வுபெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனிச்சாமி, பண்பொழி பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் கணேசன், பண்பொழி பேரூராட்சி துணைச்செயலாளர் காஜா மைதீன், பசும்பொன்,பேச்சிமுத்து, மணிகண்டன், மாரியப்பன், சசிகுமார், பூலோகராஜ், சுபிக்ஷா கருப்பசாமி மற்றும் அதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post எம்.ஜி.ஆர் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Tags : R107th ,Senkottai ,Former ,Tamil Nadu ,M. G. ,H.E. Secretary General ,Leader of the Assembly Opposition ,Eadapadi Palanisamy ,Prime Minister of State ,Sangarankovaya ,Sri Lankan Tamil Camp ,Boganallur ,Kadayanallur ,Birthday ,Dinakaran ,
× RELATED முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த...