×

சில்லி பாயிண்ட்

* பாகிஸ்தான் அணியுடன் டுனெடின் பல்கலை. ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில், 45 ரன் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. நியூசி. 20 ஓவரில் 224/7. தொடக்க வீரர் ஃபின் ஆலன் 137 ரன் (62 பந்து, 5 பவுண்டரி, 16 சிக்சர்) விளாசியதுடன் ஆப்கன் வீரர் ஹஸ்ரதுல்லாவின் ‘டி20 இன்னிங்சில் அதிக சிக்சர்’ சாதனையையும் சமன் செய்தார். பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன் (பாபர் 58). 4வது போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நாளை நடக்கிறது.

* நெதர்லாந்தில் நடக்கும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 4வது சுற்றில் உலக சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்திய இந்திய வீரர் பிரக்ஞானந்தா, ஃபிடே தரவரிசையில் 2748.3 புள்ளிகளுடன் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை (2748) பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் நம்பர் 1 வீரராக முத்திரை பதித்துள்ளார்.

* ரஞ்சி கோப்பை எலைட் பிரிவு லீக் சுற்றின் 3வது ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. சி பிரிவில் தமிழ்நாடு – ரயிவேஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

* இலங்கை – ஜிம்பாப்வே அணிகளிடையே நடைபெறும் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

* ராஞ்சியில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று மகளிர் ஹாக்கி போட்டியின் முதலாவது அரையிறுதியில் அமெரிக்கா – ஜப்பான் அணிகளும், 2வது அரையிறுதியில் இந்தியா – ஜெர்மனி அணிகளும் இன்று மோதுகின்றன.

The post சில்லி பாயிண்ட் appeared first on Dinakaran.

Tags : Silly Point ,University of Dunedin ,Pakistan ,New Zealand ,Oval ,Dinakaran ,
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...