×

பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஈரான் வான்வழி தாக்குதல்: 2 குழந்தைகள் பலியானதாக தகவல்


டெஹ்ரான்: பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் ஜெய்ஷ்-இ-அடில் தீவிரவாதிகளின் பயங்கரவாத முகாமின் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியது. கடந்த 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜெய்ஷ்-அல்-அதுல் என்ற தீவிரவாத அமைப்பானது பாகிஸ்தான் மற்றும் ஈரானில் செயல்பட்டு வருகிறது. அதேபோல் ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானிலும் செயல்பட்டு வருகிறது. ஷியா முஸ்லிம் நாடான ஈரானை எதிர்த்துப் போராடுவதன் மூலம், இப்பகுதியில் சன்னி முஸ்லிம் தன்னாட்சி நாட்டை உருவாக்க இந்த அமைப்பு இயங்கி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானின் மேற்கு பகுதி எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில் இருந்து, சன்னி பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-அடில் தீவிரவாதிகளின் பயங்கரவாத முகாமை குறிவைத்து, ஈரான் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் பலியானதாக பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை ஈரானின் புரட்சிகர காவல்படை என்ற துணை ராணுவப் படை நடத்தியது. தீவிரவாத முகாம் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தானின் ஒப்புதலுடனோ அல்லது தெரிந்தோ நடத்தப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

The post பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஈரான் வான்வழி தாக்குதல்: 2 குழந்தைகள் பலியானதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Iran ,Pakistan ,Tehran ,Jaish-e-Adil ,Jaish-al-Atul ,Sistan ,Dinakaran ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...