×

தமிழக மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு

நாகப்பட்டினம்: தமிழக மீனவர்கள் 28 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைபேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தர்மபாலன் (37). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் (43), தினேஷ் (24), கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ராஜ்குமார் (30) கனிவானண் (27), பழனிவேல் (37), நம்பியார் நகரை சேர்ந்த சதீஷ் (39), சாமாந்தான்பேட்டையை சேர்ந்த சுரேஷ் (20), ஸ்டிபன்ராஜ் (27), ராஜேஷ் (36), ரத்தினசாமி (35) ஆகிய 10 பேர் நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 13ம்தேதி இரவு 12 மணிக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 மீனவர்களையும் சிறைபிடித்து விசைப்படகை பறிமுதல் செய்தனர். பின்னர் பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று விசைப்படகுகளில் மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று மாலை மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமை சேர்ந்த ரோந்து கப்பலில் வந்த கடற்படையினர் 2 விசைப்படகுகளுடன் 18 மீனவர்களை சிறைபிடித்தனர். பின்னர் கடற்படையினர் விசாரணை நடத்தி விசைப்படகுகளுடன் மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் மேலும் ஒரு விசைப்படகையும், 6 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளாதாக தகவல் வெளியானதால் பாம்பனில் மீனவ மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post தமிழக மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nagapattinam ,Dharmapalan ,Akkaraipet ,Nagapattinam district ,Jaganathan ,Dinesh ,Akkaraipettai ,Keechanguppatty ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நகராட்சி குப்ைப...