×

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கே.கவிதாவுக்கு ‘ஈடி’ சம்மன்


புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய கே.கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் கட்சி மூத்த தலைவரும், தெலங்கானா சட்டமன்ற உறுப்பினருமான கே.கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ெடல்லி அமலாக்கத் துறை முன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கவிதாவிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதேபோல் 2022 டிசம்பரில் கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 4வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, மற்றொரு முன்னாள் அமைச்சர் சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கே.கவிதாவுக்கு ‘ஈடி’ சம்மன் appeared first on Dinakaran.

Tags : K. ,Delhi ,Edi' Summon ,New Delhi ,Summon ,Kavita ,PRS Party ,Senior Leader ,Telangana ,Assemblyman ,K. Poetry ,K. 'Edi' Samman ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...