×

கடந்த 3 ஆண்டுகளில் 60,000க்கும் மேற்பட்ட விமான உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிப்பு: விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி தகவல்

நாக்பூர்: 60,000க்கும் மேற்பட்ட விமான உதிரி பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக இந்திய விமானபடை தலைமை தளபதி சவுத்ரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள போன்சாலா ராணுவ பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய விமானபடையின் தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விமானத்தில் ஏற்படும் பழுதுகளை சரி பார்த்தல், பராமரிப்பு போன்ற பணிகளுக்கு வௌிநாடுகளில் உள்ள அசல் உபகரண உற்பத்தியாளர்களை நம்பியிருக்க முடியாது.

அதனை உள்நாட்டிலேயே மேற்கொள்ள வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் 60,000க்கும் மேற்பட்ட விமான உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. அடிப்படை பழுது பார்க்கும் கிடங்குகள் அமைப்பது உள்பட விமான படையின் அனைத்து பிரிவுகளிலும் பணிகள் மேற்கொள்ள தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

 

The post கடந்த 3 ஆண்டுகளில் 60,000க்கும் மேற்பட்ட விமான உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிப்பு: விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Air Chief ,Marshal Chaudhry ,Nagpur ,Chief of the ,Indian Air Force ,Bhonsala Military School ,Nagpur, Maharashtra ,
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...