×

ஜெகன் மோகன் ஆட்சிக்கு 87 நாட்கள் கவுண்ட் டவுன் ஆரம்பம்: போகி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு பேச்சு

திருமலை: ஆந்திராவில் இன்றிலிருந்து 87 நாட்கள் கவுண்ட் டவுன் ஆரம்பம் ஆகியுள்ளது. என்று போகி தீயிட்டு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். ஆந்திர மாநில தலைநகர் பகுதியான அமராவதி மந்தடம் கிராமத்தில் சங்கராந்தி பண்டிகையொட்டி போகி தீ மூட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் இணைந்து பங்கேற்று கொண்டாடினர். அப்போது சந்திரபாபு பேசியதாவது, “ ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு இன்று முதல் 87 நாட்கள் கவுன்டவுன் தொடங்கியுள்ளது. அமராவதியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கொள்ளையடித்தது. அமராவதி தான் நமது தலைநகர். விரைவில் ஏழைகளின் ஆட்சி இங்கிருந்து தொடங்கும். சங்கராந்தி தினத்தில் அங்கன்வாடி ஊழியர்களை ரோட்டில் போராட வைத்துள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை தெலுங்கு தேசம்- ஜனசேனா கட்சி உறுதி செய்யும். அனைவருக்கும் துணை நிற்பது எங்கள் இரு கட்சிகளின் பொறுப்பு.

வறட்சி மண்டலங்களில் கூட இந்த அரசு கவனம் செலுத்தவில்லை. மக்கள் விரோத சட்டங்கள், திட்டங்கள் அடங்கிய ஜெகன் அரசின் பேனர்கள் போகி தீயில் போடப்பட்டுள்ளது. பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்தது போல் ஜெகனுக்கு மக்கள் வாக்களித்தனர். காவல்துறையை பற்றி எதுவும் சொல்ல முடியாது. அரசின் அழுத்தம் காரணமாக காவல்துறை அரக்கர்கள் போல நடித்தார்கள். உலகில் மூன்று தலைநகரங்கள் உள்ள இடமே இல்லை. கர்னூலில் உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்படும், விசாகப்பட்டினத்தை பொருளாதார தலைநகராக மாற்றப்படும். விசாகப்பட்டினம், கர்னூல் நகரங்களுக்குப் பழைய புகழைக் கொண்டு வருவோம். எனக்கும் பவன் கல்யாணுக்கும் ஒரே மாதிரியான எண்ணம். அரசியலில் இருக்க தகுதி இல்லாதவர் ஜெகன்” இவ்வாறு அவர் பேசினார்.

 

The post ஜெகன் மோகன் ஆட்சிக்கு 87 நாட்கள் கவுண்ட் டவுன் ஆரம்பம்: போகி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Jagan Mohan ,Chandrababu Naidu ,Bogi ,Tirumala ,Andhra Pradesh ,Former ,Chief Minister ,Andhra ,Amaravati Mantadam ,Sankranti festival ,
× RELATED சொல்லிட்டாங்க…