×

ஈடி அதிகாரிகள் தாக்குதல் வழக்கில் மேலும் 2 பேர் கைது

கொல்கத்தா: மேற்குவங்க ரேஷன் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி பகுதியில் அண்மையிலி சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டன். இதுகுறித்து அமலாக்கத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய முஜிபூர் ரஹ்மான், சுகோமால் சர்தார் ஆகிய 2 பேர் கடந்த 12ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

The post ஈடி அதிகாரிகள் தாக்குதல் வழக்கில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Enforcement Department ,West Bengal ,Sandeshkali ,North 24 Parganas district ,Trinamool Congress ,Dinakaran ,
× RELATED கொலையான வங்கதேச எம்பியின் ‘சதை’...