×

அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல் ல்வி நிலையங்களில் தொடரும் வன்கொடுமைக்கு நடவடிக்கை

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஹஸ்ஸான் பைஜி வெளியிட்ட அறிக்கை: ருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், நடைபெற்ற சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தின் போது, இளங்கலை சட்டப்பிரிவு இறுதியாண்டு பட்டியலின மாணவர் ஒருவரை, 2 மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து குடிக்க வைத்துள்ளனர். சிறுநீரை குடித்ததாக மற்றவர்கள் முன்னிலையில் கேலி செய்துள்ளனர்.

புகாரின் பேரில் பல்கலைக் கழகம் விசாரணைக் குழு அமைத்து, அறிக்கையின் அடைப்படையில் காவல்துறையிடம் புகார் அளிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய மனிதத்தன்மையற்ற, அநாகரிக செயல் கண்டிக்கத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவர்களால் ஆயுத தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். ஆகவே, கல்வி நிலையங்களில் தொடரும் இத்தகைய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

The post அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல் ல்வி நிலையங்களில் தொடரும் வன்கொடுமைக்கு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : STPI ,Lviv ,CHENNAI ,S.T.P.I. Party State Executive Committee ,Hassan Baiji ,Tamil Nadu National Law University ,Ruchi-Dindigal National Highway ,STBI ,Levi stations ,Dinakaran ,
× RELATED பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கும் பாஜ: -எஸ்டிபிஐ தலைவர்