×
Saravana Stores

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பாக். ராணுவ வீரர்கள் பலி

கராச்சி: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். பதிலடி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட கெச் மாவட்டத்தின் புலெடா பகுதியில், வீரர்களின் ராணுவ பாதுகாப்பு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சிலர் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பயன்படுத்தி ராணுவ வாகனத்தை வெடிக்க செய்தனர்.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கான அந்த வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பலியான ராணுவ வீரர்கள் திப்பு ரசாக், சவுகத், சபி உல்லா, தாரிக் அலி, முகமது தாரிக் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, வடக்கு வசீரிஸ்தானில் உளவு பிரிவு படையினரின் அதிரடி நடவடிக்கையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

The post தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பாக். ராணுவ வீரர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Bagh ,Karachi ,Pakistan ,Buleta ,Kech district ,Balochistan ,Pag ,
× RELATED பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம்...