×

பொன்னமராவதி பகுதியில் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கல்

 

பொன்னமராவதி,ஜன.14: பொன்னமராவதி பகுதியில் பல இடங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொன்னமராவதி அருகே உள்ள சேரனூர் மற்றும் கார்ணாபட்டியில் ஊராட்சித்தலைவர்காமராஜ் பொங்கல் தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார். ஏனாதியில் தலைவர்அழகுமுத்து,கோவணூரில் தலைவர் ராமசாமி ஆகியோர் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

கண்டியாநத்தம் ரேஷன் கடையில் ஊராட்சித்தலைவர் செல்வி பொங்கல் தொகுப்புகள் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் வார்டு உறுப்பினர் அழகப்பன், கூட்டுறவு முன்னாள் துணைத்தலைவர்அழகு, ரேஷன்கடை பணியாளர்அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்வேறு இடங்களில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.

The post பொன்னமராவதி பகுதியில் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Pongalparisu ,Ponnamaravati ,Pongal ,Panchayat ,Kamaraj ,Cheranur ,Karnapatti ,Azhakumuthu ,Enadi ,Ramasamy ,Govanur ,Parisu ,Ponnamaravathi ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...