×

திருவப்பூரில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு

 

புதுக்கோட்டை, ஜன.14: தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிளான சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார்.

எம்பி அப்துல்லா, எம்எல்ஏ முத்துராஜா, நகர செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாலையிடு கற்பகவிநாயக திருமண மண்டபத்தில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த இரண்டு இடங்களில் நடந்த பயிற்சி வகுப்புகளில் இளைஞர் அணி – மாணவர் அணி , மகளிர் அணி ,தொண்டர் அணி – தொழிலாளர் அணி , வழக்கறிஞர் அணி ,பொறியாளர் அணி ,

மருத்து அணி , விளையாட்டு மேம்பாட்டு அணி ,சிறுபான்மை நல உரிமைப்பிரிவு , விவசாய அணி , விவசாய தொழிலாளரணி , சுற்றுச்சூழல் அணி – அயலக அணி ,உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் , துணை அமைப்பாளர்கள் நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post திருவப்பூரில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : North District DMK ,Tiruvapur ,Pudukottai ,Tamil Nadu ,DMK IT ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...