×

அத்தியூர் கிராமத்தில் 22 கண்காணிப்பு கேமராக்கள்

 

குன்னம்,ஜன.14: அத்தியூர் கிராமத்தில் 22 கண்காணிப்பு கேமராக்களை பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளா தேவி திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர் கிராமத்தில் கிராம இளைஞர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியில் அத்தியூர் கிராமத்தில் முக்கிய இடங்களில் புதியதாய் அமைக்கப்பட்ட 22 கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி) எஸ்பி ஷ்யாம்ளா தேவி பார்வையிட்டு, திறந்து வைத்தார்.

மேலும் அத்தியூர் கிராமம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை தனது சொந்த முயற்சியில் அமைத்த ஊர் பொதுமக்களை எஸ்பி பாராட்டினார். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி பொதுமக்களும் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு தங்கள் ஊரில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பயனடைய கேட்டுக்கொண்டார்.

பொங்கல் பண்டிகை விளையாட்டுப் போட்டிகளை தகுந்த முன் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் போட்டிகளை நடத்தி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி மதியழகன், டிஎஸ்பி சீராளன், மங்களமேடு எஸ்ஐ சரவணகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிசிடிவி கேமராக்களை அமைத்து கொடுத்த திட்டக்குடி ஆர்விஎஸ் டெக்னாலஜி நிறுவனத்தை பொதுமக்கள் பாராட்டினர்.

The post அத்தியூர் கிராமத்தில் 22 கண்காணிப்பு கேமராக்கள் appeared first on Dinakaran.

Tags : Athiyur village ,Gunnam ,Perambalur ,SP ,Shyamla Devi ,Perambalur district ,Athiyur ,
× RELATED ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலி