×

கரூரில் வழிகாட்டி மதிப்பு அடிக்கடி மாற்றம்

 

வேலாயுதம்பாளையம், ஜன. 14: தமிழக அரசுக்கு முக்கிய வருவாய் இனமாக இருப்பது பத்திர பதிவுத்துறை ஆகும். எந்த ஒரு நபர் இடத்தை வாங்கினாலும் விற்றாலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சென்று சப்-ரிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தால் மட்டுமே அது செல்லும். இதன் அடிப்படையில் தமிழக அரசு தற்போது ஒருவர் இடத்தை வாங்கும் பொழுது பதிவு கட்டிடமாக 7+2 என்ற அடிப்படையில் 9 சதவிகிதம் முத்திரைத்தாள் கட்டம் செலுத்த வேண்டும்.

ஒரு லட்சத்திற்கு கூடுதலாக இருக்கும் பொழுது அதன் பின் குறைந்த அளவு கட்டணத்தில் மாறுபடும், கரூர் மாநகராட்சி பகுதியில் எந்த ஓராண்டுக்கு முன் ஒரு சதுர அடி 200 முதல் 300 வரை வழிகாட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு சதுர அடி மாநகராட்சி பகுதியில் ரூ. 600 முதல் ரூ. 5000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஒரு சதுர அடி ரூ. 100 என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு சென்டின் விலை கிராமப்புறத்தில் ரூ. 4360 ஒரு ஏக்கர் மதிப்பு ரூ. 436000 ஆயிரம்.

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 11 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. கரூரில் 3, சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி, தரகம்பட்டி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், நங்கவரம் குளித்தலை, வேலாயுதம்பாளையம் ஆகிய 11 பத்திரபதி மையங்கள் உள்ளன. மாவட்டத்தில் சராசரியாக தினசரி 400 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுகின்றன. இந்நிலையில் 100க்கும் குறைவாகவே பத்திரப்பதி நடைபெறுவதால் பொதுமக்கள் இடத்தை விற்க வாங்க முடியாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் நிலம் விற்பனை வாங்கல் தொடர்பான தொழிலில் மந்த நிலையே ஏற்பட்டுள்ளது. நிலத்தின் வழிகாட்டி மதிப்பில் தகுந்த நெறி முறையை அரசு கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரூரில் வழிகாட்டி மதிப்பு அடிக்கடி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Velayuthampalayam ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED கரூர் காந்தி கிராமத்தில் பராமரிப்பு...