×

பொங்கல் பண்டிகை கொண்டாட வேலூர் மத்திய சிறையில் 30 கைதிகளுக்கு பரோல்

வேலூர், ஜன.14: பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக வேலூர் மத்திய சிறையில் இருந்து 30 கைதிகள் பரோலில் சென்றுள்ளனர். தமிழகத்தில் சிறைகளில் உள்ள நன்னடத்தை கைதிகளுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் பரோல் வழக்கப்பட்டு வருகிறது. அதன்படி தீபாவளி, பொங்கல் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கைதிகள் பரோலில் சென்று வருகின்றனர். இந்தாண்டு பொங்கல் பண்டிகையை உறவினர்களுடன் கொண்டாடுவதற்காக வேலூர் மத்திய சிறையில் உள்ள 30 நன்னடத்தை கைதிகள் விண்ணப்பித்தனர்.

இதில் 10 கைதிகள் நேற்று முன்தினமும், 20 கைதிகள் நேற்றும் என மொத்தம் 30 கைதிகள் பரோலில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் மீண்டும் சிறை திரும்புவார்கள். இதேபோல் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு நன்னடத்தை பெண் கைதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பொங்கல் பண்டிகை கொண்டாட வேலூர் மத்திய சிறையில் 30 கைதிகளுக்கு பரோல் appeared first on Dinakaran.

Tags : Vellore Central Jail ,Pongal festival ,Vellore ,Tamil Nadu ,Diwali ,Pongal ,
× RELATED சாராய வியாபாரி குண்டாசில் கைது