×

காரைக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி: கலெக்டர், நகராட்சி சேர்மன் வழங்கினர்

காரைக்குடி, ஜன. 14: காரைக்குடி வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் சேவுகப்பெருமாள். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதேபகுதியில் உள்ள ரவிச்சந்திரன் மகன் விமல் என்பவரது வீட்டு கழிப்பறை அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். செப்டிக்டேங்க் தொட்டி மூடியை திறந்து பணி செய்ய முற்படும் போது விஷவாயு தாக்கி இறந்தார். இதுதொடர்பாக தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் கலெக்டர் ஆஷாஅஜித், நகராட்சி சேர்மன் முத்துத்துரை ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவரது மனைவி மாரியம்மாளிடம் நிவாரண தொகை ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது.

The post காரைக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி: கலெக்டர், நகராட்சி சேர்மன் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Karaikudi gas ,Karaikudi ,Sevugaperumal ,Vallalar Nagar ,Ravichandran ,Vimal ,Municipal Chairman ,Dinakaran ,
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!