×

தொகுதி பங்கீடு இறுதியானது: கார்கே, ராகுலை சந்தித்தார் கெஜ்ரிவால்


புதுடெல்லி; இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுல்காந்தியை ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம்ஆத்மி கட்சி டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சி நடத்துகிறது. இதையடுத்து தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் டெல்லி, பஞ்சாப் மாநிலங்கள் தவிர கோவா, குஜராத், அரியானா மாநிலங்களிலும் தொகுதி ஒதுக்கும்படி காங்கிரசிடம் கோரிக்கை விடுத்தது.

இதுதொடர்பாக இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளன. இதில் இருகட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து நேற்று காணொலி மூலம் இந்தியா கூட்டணி ஆலோசனை நடந்து முடிந்த பிறகு, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்திற்கு நேரடியாக சென்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். அப்போது ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோர் அங்கு இருந்தனர். கெஜ்ரிவாலுடன் ஆம்ஆத்மி எம்பி ராகவ் சதா சென்று இருந்தார்.

The post தொகுதி பங்கீடு இறுதியானது: கார்கே, ராகுலை சந்தித்தார் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Kharge ,Rahul ,Delhi ,Aam Aadmi Party ,Chief Minister ,Congress ,president ,Rahul Gandhi ,India alliance ,Punjab ,Kharke ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர்...