×

ஈராக், சிரியா மீது துருக்கி தாக்குதல்


இஸ்தான்புல்: ஈராக், சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரான், ஈராக், சிரியா, அர்மீனியா போன்ற நாடுகளில் எல்லைபகுதியில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்பவர்கள் குர்திஷ்கள். ஆனால் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையை பயங்கரவாதமாக அறிவித்து அவர்களுக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இருதினங்களுக்கு முன் ஈராக்கில் உள்ள துருக்கி ராணுவ தளம் மீது குர்திஷ் நடத்திய தாக்குதலில் 9 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக ஈராக், சிரியா எல்லைகளில் குர்திஷ் போராளிகள் மீது துருக்கி வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வௌியாகவில்லை.

The post ஈராக், சிரியா மீது துருக்கி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : attack ,Iraq, Syria ,Istanbul ,Turkish army ,Iraq ,Syria ,Iran ,Armenia ,Kurdish People's Defense Force ,Turkey ,Dinakaran ,
× RELATED விஷவாயு தாக்குதல்: புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை