×

அர்த்தமுள்ள தமிழர் திருநாள்

தமிழர் திருநாள் பல அர்த்தமுடையதாகும். “விவசாயி சேற்றில் கால்வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்” என்பார்கள். இவ்வுலகின் எல்லா உயிர்க்கும் உணவளிக்கும் விவசாயிகளை உழவர் திருநாள் நினைவு கொள்வதாக அமையும். தை மாதத்தில் வரும் தைப்பூசம் அன்றே இவ்வுலகம் தோன்றியதாக நம்பப்படுகிறது. வருடம் முழுவதும் நல்ல நீரும் உண்ண உணவும் கிடைக்க வேண்டும், மும்மாரி பொழிய வேண்டும் என நம் மூதாதையர் இயற்கையே இறைவன் என கொண்டு சூரியனை வழிபடவும் இந்த தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது. நமது சமுதாயத்தில் பல பண்டிகைகள் காணப்பட்டாலும் தமிழர்களுக்கென உள்ள முக்கிய பண்டிகை தைத்திருநாளாகும். “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்ற திருமூலரின் வாக்குக்கிணங்கிய முழு அர்த்தம் தரும் பண்டிகை தமிழர் திருநாளாகும்.

The post அர்த்தமுள்ள தமிழர் திருநாள் appeared first on Dinakaran.

Tags : Farmers' Day ,Thaipusam ,Thai ,
× RELATED இரண்டாம் உலகப் போரின்போது சியாம்...