×

அதிகாலை, மாலை நேரங்களில் தனியார் தோட்டங்களில் மேயும் மான்கள் கூட்டம்

திருவில்லிபுத்தூர், ஜன. 13: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்களில் அதிக எண்ணிக்கையில் மான்கள் உணவு தேடி வந்து செல்கின்றன. திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனக்காப்பகத்தின் அடிவரப்பகுதியான செண்பகத் தோப்பில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இதன்படி, புலிகள், சிறுத்தைகள், யானைகள், கரடிகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்டவை அதிகம் வசிக்கின்றன. இந்த மலைப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் உள்ள புள்ளிமான்கள் அடிக்கடி காலை மற்றும் மாலை நேரங்களில் மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் தோட்டங்கள் மற்றும் சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இவற்றை அந்த வழியாக செல்வோர் ஆர்வமுடன் ரசித்துச் செல்கின்றனர்.

The post அதிகாலை, மாலை நேரங்களில் தனியார் தோட்டங்களில் மேயும் மான்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputhur ,Chenbagathoppu ,Tiruvilliputhur ,Western Ghats ,Chenbhagat forest ,Meghamalai ,Tiger Forest Reserve ,Dinakaran ,
× RELATED செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்