×

திருவாரூர் மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம்

 

நீடாமங்கலம், ஜன.13: திருவாரூர் மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் கொரடாச்சேரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கலியபெருமாள், மாவட்ட துணைச்செயலாளர் கார்த்திக் தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகர்,செல்வம் வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் அன்பரசன்,கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் பாலச்சந்தர் உள்ளிட்ட ஒன்றிய,பேரூர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழ் புத்தாண்டு அன்று, அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடி ஏற்றுவது, கழக இளைஞரணி மாநாட்டுக்கு சுவர் விளம்பரங்கள் செய்வது.10 வாக்குச்சாவடிக்கு ஒரு நபர் வீதம் பொருப்பாளர்கள் நியமிப்பது, உறுப்பினர் உரிமைச் சீட்டு கட்சியினரிடம் வழங்குவது, இளைஞரணி மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்வது, பூர்த்தி,செய்யப்பட்ட நீட் எதிர்ப்பு கையெழுத்து அட்டை சமர்ப்பிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

The post திருவாரூர் மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,DMK ,Needamangalam ,Thiruvarur district ,Koradacherry ,District Council ,President ,Dhanraj ,District Secretary ,Poondi Kalaivanan ,MLA ,District ,Panchayat ,Thaliyamangalam Balu ,Tiruvarur ,District DMK ,Dinakaran ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி