×

தரமான விதை வழங்க உற்பத்தியாளர்களுக்கு புத்தூட்டப்பயிற்சி

 

தஞ்சாவூர், ஜன. 13: தஞ்சாவூர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தரமான விதைகளை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விதை உற்பத்தியாளர்களுக்கு விதைப்பண்ணை பதிவு செய்யும் முறைகள், விதைப்பண்ணை பராமரித்தல், விதைப்பண்ணைகளில் கலவன்களை நீக்குதல், அறுவடை செய்த விதைக்குவியல்களை முறைப்படி உலர்த்துதல் மற்றும், விதைத்தரங்களை பேணுதல் ஆகியவை குறித்து மாவட்டம், காட்டுத்தோட்டம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறையில் புத்தூட்டப்பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி விதைச்சான்று மற்றம் அங்ககச்சான்று உதவி இயக்குநர் முகமது பாருக் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) சுஜாதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இப்பயிற்சியில் விதைச்சான்று அலுவலர் ஹசீனாபேகம், விதைச்சான்று அலுவலர், அம்மாப்பேட்டை பிரபு அவர்களால் உற்பத்தியாளர்களுக்கு தரமான விதை உற்பத்தி குறித்த தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டது.

The post தரமான விதை வழங்க உற்பத்தியாளர்களுக்கு புத்தூட்டப்பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Seed Certification and Certification Department ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...