கன்னியாகுமரி, ஜன.13: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குறளோவியம் என்கிற தலைப்பில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களின் படைப்புகளை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்கள் கன்னியாகுமரி அரசு அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சியினை சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 16ம்தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்வில் பரிசுகள் வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தெரிவித்துள்ளார். அதேபோல் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.
The post கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்களின் ஓவிய கண்காட்சி appeared first on Dinakaran.