×

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மோடியை விதிதான் தேர்வு செய்தது: அத்வானி உருக்கம்

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் ஜன.22ம் தேதி திறக்கப்படுகிறது. இதுபற்றி ராமர் கோயிலுக்காக ரதயாத்திரை நடத்தி மூத்த பா.ஜ தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி கூறியிருப்பதாவது: அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும் என்பதை விதி முடிவு செய்து, அதற்காக பிரதமர் மோடியைத் தேர்வு செய்தது. ராமர் கோவில் கட்டுவதற்காக 33 ஆண்டுகளுக்கு முன்பு ரதயாத்திரை மேற்கொண்டேன். அயோத்தியில் ராமர் கோவிலில் பிரமாண்டமான கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெறும் தருணத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லாததை நான் உணர்கிறேன். இந்த கோயில் அனைத்து இந்தியர்களையும் ராமரின் குணங்களை பின்பற்ற ஊக்குவிக்கும் என்றார்.

The post அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மோடியை விதிதான் தேர்வு செய்தது: அத்வானி உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Fate ,Modi ,Ram Temple ,Ayodhya ,Advani Urukkam ,New Delhi ,Ayodhya Ram Temple ,BJP ,Deputy Prime Minister ,L.K. Advani ,
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...