×

ரூ.17,840 கோடி மதிப்பில் நாட்டின் நீண்ட கடல் பாலம் பிரதமர் மோடி திறந்தார்

மும்பை: மகாராஷ்டிராவில் ஷிவ்ரி – நவசேவா இடையே ரூ.17,840 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட டிரான்ஸ் ஹார்பர் கடல் பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். மும்பையில் உள்ள ஷிவ்ரியில் இருந்து ராய்கட் மாவட்டத்தில் உள்ள நவசேவா வரையில் சுமார் 21.8 கி.மீ நீளத்தில் மும்பை டிரான்ஸ் ஹார்பர் கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீண்ட கடல் பாலமான இது ரூ.17,840 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இந்த மும்பை டிரான்ஸ்ஹார்பர் இணைப்புப் பாலத்துக்கு 2016 டிசம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த பாலத்தின் மூலம் மும்பையில் இருந்து ராய்கட்டிற்கு 20 நிமிடங்களில் சென்றடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். பின்னர் நாசிக் சென்ற பிரதமர் தபோவன் மைதானத்தில் 27வது தேசிய இளைஞர் விழாவைத் தொடங்கி வைத்தார். அப்போது, இளைஞர்கள் தங்களை விரைவில் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும்,’’ என்று பேசினார்.

The post ரூ.17,840 கோடி மதிப்பில் நாட்டின் நீண்ட கடல் பாலம் பிரதமர் மோடி திறந்தார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Mumbai ,Trans Harbor Sea Bridge ,Shivri - Navaseva ,Maharashtra ,Shivri ,Navaseva ,Raigad district ,PM Modi ,Dinakaran ,
× RELATED முதல்கட்ட வாக்குப்பதிவில் கிடைத்த...