×

லாரி- டூவீலர் மோதல் தாய், மகன் சாவு

காரிமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவருக்கு ஜோதி (34) என்ற மனைவியும் சரண் (14), தீரன் (9) என்ற மகன்களும் உள்ளனர். ஜோதி தனது மகன்களுடன் திருப்பூர் மாவட்டத்தில் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், பொங்கல் பண்டிகையை கொண்டாட நேற்று முன்தினம் மாலை, டூவீலரில் மகன்களுடன் திருப்பூரில் இருந்து, கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மாட்டுலாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் சென்றபோது, பின்னால் வந்த லாரி, டூவீலர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், ஜோதி, தீரன் உயிரிழந்தனர்.

The post லாரி- டூவீலர் மோதல் தாய், மகன் சாவு appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Ramesh ,Melpatti ,Krishnagiri district ,Jyoti ,Saran ,Theeran ,Tirupur district ,Banyan Company ,
× RELATED திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்