×

பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் வந்தே பாரத் ரயிலில் துர்நாற்ற உணவு சப்ளை: ரயில்வே பயணி ஆவேசம்

புதுடெல்லி: பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் வந்தே பாரத் ரயிலில் துர்நாற்றமடிக்கும் உணவு சப்ளை செய்யப்பட்டதாக ரயில்வே பயணி ஒருவர் ஆவேசத்துடன் வீடியோ பதிவிட்டுள்ளார். எக்ஸ்பிரஸ் ரயில்களை காட்டிலும் அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில், பயணிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. அதற்காக கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. மற்ற ரயில்களை காட்டிலும் வந்தே பாரத் ரயிலில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்ற வந்தே பாரத் ரயில் சென்றது. அந்த ரயிலில் சென்ற பயணி ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போய் இருந்ததாக கூறி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை ரயில்வே அமைச்சர் மற்றும் இந்திய ரயில்வேவுக்கு டேக் செய்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ‘வந்தே பாரத் ரயில் பயணத்தின் போது எனக்கு ரயிலில் உணவு கொடுக்கப்பட்டது.

அந்த உணவு மிகவும் மோசமாக கெட்டுபோய் இருந்தது. அந்த உணவில் துர்நாற்றம் வீசியதால், சாப்பிட முடியவில்லை. இந்த உணவை எடுத்துச் செல்லுங்கள் என்று உணவு சப்ளை செய்த பணியாளர்களிடம் தெரிவித்தேன். மாற்று உணவும் வழங்கப்படவில்லை. வந்தே பாரத் ரயில்வே நிர்வாகம், உணவுக்கும் சேர்த்து நான் செலுத்திய கட்டணத்தை திருப்பி தர வேண்டும். மேலும் பயணிகளுக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் போது ரயில்வே துறை கவனமாக இருக்க வேண்டியது அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் வந்தே பாரத் ரயிலில் துர்நாற்ற உணவு சப்ளை: ரயில்வே பயணி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Bharat ,NEW DELHI ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு