×

சுப.வீரபாண்டியனுக்கு தந்தை பெரியார் விருது; பெ.சண்முகத்துக்கு டாக்டர் அம்பேத்கர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 2023-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான டாக்டர் அம்பேத்கர் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டாக்டர் பெ.சண்முகத்துக்கு வழங்கப்படும் எனவும் 2023-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது சுப.வீரபாண்டியனுக்கு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுவர்களை சிறப்பு செய்யும் வகையில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்” விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது.

அதேபோன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசால் கடந்த 1995ம் ஆண்டு முதல் “டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது” வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 25 பேர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்நிலையில்,

2023-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான டாக்டர் அம்பேத்கர் விருது, தந்தை பெரியார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,

டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு பெ.சண்முகம் தேர்வு:

2023-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டாக்டர் பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார். விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படும். விருதுபெறும் பெ.சண்முகம் மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக இருந்து சேவை செய்து வருகிறார். வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றியவர் பெ.சண்முகம்.

தந்தை பெரியார் விருதுக்கு சுப.வீரபாண்டியன் தேர்வு:

2023ம் ஆண்டு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சுப.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுபெறும் சுப.வீரபாண்டியன் தமிழக அரசின் சமூகநீதி கண்காணிப்புக் குழுவின் தலைவராக உள்ளார்.

The post சுப.வீரபாண்டியனுக்கு தந்தை பெரியார் விருது; பெ.சண்முகத்துக்கு டாக்டர் அம்பேத்கர் விருது: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Suba Veerapandian ,Tamil Nadu Government ,Chennai ,Government of Tamil Nadu ,Marxist ,Dr. ,P. Shanmug ,Suba. Veerapandian ,P. Shanmughat ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...