×

ஜனாதிபதி உரையுடன் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. ஜன.31 முதல் பிப்.9 வரை நடைபெறும்: பிரகலாத் ஜோஷி அறிவிப்பு

டெல்லி: 17வது மக்களவையின் இறுதி கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 9 வரை நடைபெறும் என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, ஆண்டுதோறும் 3 முறை கூடுகிறது. இதில், பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும். அதை தொடர்ந்து, மழைக்காலக் கூட்டத் தொடர் மற்றும் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆகியவை நடைபெறும். இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது.

இந்நிலையில், இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கிபிப்ரவரி 9-ம் தேதி வரை நடக்கிறது. இது ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார். அதை தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

பின்னர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் உள்ளிட்ட அலுவல்கள் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேசமயம், நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நெருங்குவதால் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது.

The post ஜனாதிபதி உரையுடன் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. ஜன.31 முதல் பிப்.9 வரை நடைபெறும்: பிரகலாத் ஜோஷி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP government ,Prakalat Joshi ,Delhi ,17th Lok Sabha ,Dinakaran ,
× RELATED கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில்...