×

கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 504 நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் கொள்முதல்-கண்காணிப்பாளர் தகவல்

கலவை : கலவையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று 504 நெல்மூட்டைகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்மழை பெய்ததால், நெற் பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. இதனால் கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் ஒரு சில இடங்களில்  தண்ணீர் வடிய தொடங்கியது. இதனால் விவசாயிகள் தனது விளை நிலங்களில் உள்ள நெற்பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர். மேலும் கலவையில்  உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது விளை நிலங்களில் விளைந்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி நேற்று கலவை ஒழுங்குமுறை  விற்பனை கூடத்திற்கு, 504 நெல் மூட்டைகள்  விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. அதில் 75 கிலோ நெல் மூட்டைகளின் விபரம்: சிஒ 51 ரகம்  குறைந்தபட்ச விலையாக் ₹832, அதிகபட்ச விலையாக ₹959க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. ஏடிடி 37 குண்டு ரகம் குறைந்தபட்ச விலை ₹1,089க்கும், அதிகபட்ச விலையாக ₹1,135க்கும், ஆர்.என்.ஆர் சோனா ரகம் குறைந்தபட்ச விலையாக ₹959க்கும், அதிகபட்ச விலையாக ₹1,055க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.மேலும், நெல் மூட்டைகளுக்கான தொகை அவர்களது வங்கி கணக்கில் 3 நாட்களுக்குள் செலுத்தப்படவுள்ளதாக கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் பி.மதன்பாண்டியன் தெரிவித்தார்.விரைவான விற்பனைக்கு நடவடிக்கைகலவை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பி.மதன்பாண்டியன் கூறுகையில், ‘கலவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கொடுத்து உரிய விலை பெற முடியும். மேலும் இந்த மின்னணு வர்த்தகம் மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களை விரைந்து விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு விவசாயிகளுக்கு  முன்னுரிமை அளித்துள்ளது. விவசாயிகள் எந்த நேரத்திலும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு தங்கள் விளை நிலங்களில் விளைந்த நெல்களை கொண்டு வரலாம்’ என்றார்….

The post கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 504 நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் கொள்முதல்-கண்காணிப்பாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mixture ,Ranipet district ,Observer ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...