×

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மகளிருக்கான கால்பந்து போட்டி நஞ்சநாடு அரசு பள்ளி அணி வெற்றி

 

ஊட்டி,ஜன.12: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஊட்டியில் நடந்த மகளிருக்கான கால்பந்து போட்டியில் நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலகம் மற்றும் நீலகிரி கால்பந்து சங்கம் ஆகியவை சார்பில் ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தற்போது மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நடந்தது வருகிறது. நேற்று மகளிருக்கான கால்பந்து போட்டிகள் நேற்று துவங்கியது. இதில், மாவட்டத்தில் உள்ள 12 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்துக் கொண்டு விளையாடினர். இப்போட்டிகளை நீலகிரி மாவட்ட உடற்பயிற்சி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நேற்று நடந்த போட்டியில் ஊட்டி ஜோசப் மேல்நிலைப் பள்ளியும், நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில், நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மணி, சுரேஷ், அருண், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மகளிருக்கான கால்பந்து போட்டி நஞ்சநாடு அரசு பள்ளி அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Nanjanadu Govt School Team ,Girls' Football Tournament ,Artist Centenary ,Ooty ,Nanjanadu Government Higher Secondary School ,chief minister ,Dr. ,Karankaran ,Nanjanad ,Government School Team ,Karankaran Centenary ,Dinakaran ,
× RELATED காவிகளுக்கு இந்த மண்ணில் இடம் இல்லை: தி.க. தலைவர் வீரமணி பேச்சு