×

நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.14.7 லட்சம் கோடி

புதுடெல்லி: ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டில் நேரடி வரிகள் (தனிநபர் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி) மூலம் ரூ.18.23 லட்சம் கோடியை வசூலிக்க பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது கடந்த நிதியாண்டில் கிடைத்த ரூ.16.61 லட்சம் கோடியை விட 9.75 சதவீதம் அதிகம். தற்போது வரை நேரடி வரி வசூல் ரூ.14.70 லட்சம் கோடியாக உள்ளது.

இதன் மூலம் பட்ஜெட் இலக்கில் 81 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வரியை விட இது 19.41 சதவீதம் அதிகம். 2023 ஏப்ரல் 1 முதல் கடந்த 10ம் தேதி வரை ரூ.2.48 லட்சம் கோடி ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வருமான வரி மற்றும் தனிநபர் வருமான வரி வளர்ச்சி விகிதம் முறையே 8.32 சதவீதம் மற்றும் 26.11 சதவீதம்’ என கூறப்பட்டுள்ளது.

The post நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.14.7 லட்சம் கோடி appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Union Board of Direct Taxes ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...