×

அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்த விவசாயி, பெண் மீது தாக்குதல் தந்தை, மகனுக்கு போலீஸ் வலை ஆரணி அருகே கல்குவாரியால் நெற்பயிர்கள் பாதிப்பு

ஆரணி, ஜன.12: ஆரணி அருகே கல்குவாரியால் நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்த விவசாயி மற்றும் பெண்ணை தாக்கிய தந்தை மகனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஆரணி அடுத்த கீழ்நகர் ஊராட்சி குருமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணி(51), விவசாயி. இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்து வருகிறார். மேலும், அதேபகுதியில் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த ரவி கல்குவாரி வைத்து நடத்தி வருகிறார். மேலும், கல்குவாரியில் ஜல்லி மிஷின் மூலம் பாறைகற்கல் உடைத்து ஜல்லி வியாபாரம் செய்து வருவதால், அருகில் மணியின் விவசாய நிலத்தில் உள்ள நெற்பயிர்கள் மீது ஜல்லி மாவு காற்றில் பறந்து படிந்து வருவதால், நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு மணி புகார் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் கடந்த வாரம் ரவியின் கல்குவாரிக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த ரவி, அவரது மகன் சரண்ராஜ் ஆகிய இருவரும் அருகில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த மணியிடம் சென்று நீ தான் எங்கள் குவாரியை பற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். மேலும், கணவரை தாக்கியதை தடுக்கசென்ற அவரது மனைவி அமுதா, மணியின் தம்பி ரவி ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில், காயமடைந்த அமுதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சைப் பெற்று வந்ததார். இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசில் அமுதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கல்குவாரி உரிமையாளர் ரவி, அவரது மகன் சரண்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்த விவசாயி, பெண் மீது தாக்குதல் தந்தை, மகனுக்கு போலீஸ் வலை ஆரணி அருகே கல்குவாரியால் நெற்பயிர்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kalquari ,Arani ,Mani ,Kurumanthangal Panchayat ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்