×

இன்று முதல் டி20 நியூசி-பாக் பலப்பரீட்சை

ஆக்லாந்து: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் அணி இப்போது நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் இன்று ஆக்லாந்தில் நடக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்கள் ஜன.14ம் தேதி ஹாமில்டன், ஜன.17ம் தேதி டுனேடின், ஜன19,21தேதிகளில் கிறைஸ்ட்சர்ச் நகரங்களில் நடக்கின்றன. வேகம் ஷாகீன் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியும், மீண்டும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த 2 அணிகளுக்கு இடையே இதுவரை நடந்த 34 டி20 ஆட்டங்களில் பாக் 20, நியூசி 13 ஆட்டங்களில் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் ரத்து . இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் தலா 2ல் இரு அணிகளும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டன. இவ்விரு அணிகளுக்கு இடையே இதுவரை 7 டி20 தொடர்கள் நடந்துள்ளன. அவற்றில் பல தொடர்கள் ஒரே ஒரு ஆட்டம் கொண்ட தொடர்களாக இருந்துள்ளன. அவற்றில் 4 தொடர்களை நியூசியும், 3 தொடர்களை பாக்கும் கைப்பற்றி உள்ளன.

The post இன்று முதல் டி20 நியூசி-பாக் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : T20 Newsi-Pak Test ,Auckland ,Pakistan ,New Zealand ,Australia ,T20 ,Hamilton ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...