×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ பூண்டு ரூ.400

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு ரூ.400க்கு விற்பனையானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேற்று காலை 650 வாகனங்களில் 7,300 டன் காய்கறிகள் வந்தது. புதிய வகை காய்கறிகளும் வந்துள்ளன. ஒரு கிலோ வெத்தல வள்ளி கிழங்கு ரூ.70, காரைக்கரணை கிழங்கு ரூ.40, மொச்சை, துவரங்காய் மற்றும் சிறுகிழங்கு ரூ.60, பச்சை பட்டாணி ரூ.40, பாசிப்பயிறு ரூ.50, தக்காளி ரூ.38, பெரிய வெங்காயம் ரூ.32, சின்ன வெங்காயம் ரூ.60, கேரட் ரூ.45, பீன்ஸ் ரூ.35, பீட்ரூட் ரூ.50, சவ்சவ் ரூ.20, முள்ளங்கி ரூ.35, முட்டைகோஸ் ரூ.15, வெண்டைக்காய் ரூ.40, கத்தரிக்காய் ரூ.25, காராமணி ரூ.45, பாகற்காய் ரூ.40, சுரைக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.120, சேனை கிழங்கு ரூ.35, காலிபிளவர் ரூ.20, இஞ்சி ரூ.100, அவரைக்காய் ரூ.35, பீரக்கங்காய் ரூ.35, எலுமிச்சை ரூ.50, கோவைக்காய் ரூ.35, கொத்தவரங்காய் ரூ.45 என அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிக பட்சமாக ஒரு கிலோ பூண்டு ரூ.400க்கு விற்பனையானது. புறநகர் பகுதிகளில் ரூ.450க்கு பூண்டு விற்கப்படுகிறது.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ பூண்டு ரூ.400 appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Coimbet ,Chennai ,Coimbed market ,
× RELATED கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது