×

பொங்கலை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் புறப்பாடு விவரம் குறித்து மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாக இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் புறப்பாடு விவரம் குறித்து மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

30.12.2023-க்கு முன்பு முன்பதிவின் போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாக பயணிக்க முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் அதற்கு பதிலாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் சென்றடைந்து, அங்கு தாங்கள் கோயம்பேட்டில் முன்பதிவு செய்த அதே நேரத்தில் புறப்படும் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழகங்களான விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி பேருந்துகளில் (மூன்றுக்கு இரண்டு இருக்கை (3X2) கொண்டவை) பயணிக்க முன்பதிவு செய்தவர்களும், பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் விழுப்புரம், திருச்சி, மதுரை மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க கோயம்பேட்டிற்கு வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

12/01/2024 முதல் 14/01/2024 வரை கிளாம்பாக்கத்திலிருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.

NH45 தேசிய நெடுஞ்சாலை வழியாக கும்பகோணம் மார்க்கமாக இயங்கும் பேருந்துகளில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தும் (KCBT) அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) கழகத்தைச் சார்ந்த பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்தும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்கின்ற நாகப்பட்டினம், கும்பகோணம், திருத்துறைபூண்டி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

The post பொங்கலை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் புறப்பாடு விவரம் குறித்து மேலாண் இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Managing Director ,State Rapid Transport Corporation ,National Highway ,Pongal ,CHENNAI ,Pongal festival ,Melan Director ,National Highway NH-45 ,Government Rapid Transport Corporation ,Managing ,Dinakaran ,
× RELATED சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை...