×

பெண் காவலர்கள் ஓய்வு இல்லத்தை திறந்து வைத்தார் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்!

சென்னை: சென்னை பூக்கடையில் புதுப்பிக்கப்பட்ட “பெண் காவலர்கள் ஓய்வு இல்லத்தை” சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் திறந்து வைத்தார். வெளி மாவட்டங்களிலிருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு வரும் பெண் காவலர்கள் தங்குவதற்கு வசதியாக சென்னை, சி-1 பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வால்டாக்ஸ் ரோடு, ஐசக்தெருவில் (சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே) “ பழைய பெண் காவலர்கள் ஓய்வு இல்லம்” பயன்பாட்டில் இருந்து வந்தது.

மேற்படி புனரமைக்கப்பட்ட பெண் காவலர்கள் ஓய்வு இல்லத்தை இன்று (11.01.2024) காலை சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் காவல் ஆணையாளர் அவர்கள் காவல் ஓய்வு இல்ல வளாகத்தில் மரக்கன்றை நட்டார். இந்த பெண் காவலர் ஓய்வு இல்லத்தில் மொத்தம் 21 அறைகள் மற்றும் 15 படுக்கைகள் கொண்ட ஒரு பொது அறையும் உள்ளது.

இந்த பெண் காவலர் ஒய்வு இல்லத்தின் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழிகள் மற்றும் நடைபாதையில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு அறையில் இருவர் வீதம் 42 பெண் காவலர்களும் , பெரிய பொது அறையில் 15 பெண் காவலர்களும் தங்கலாம். இந்த பெண் காவலர் ஒய்வு இல்லத்தில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களிருந்து வரும் பெண் காவலர்கள் மேற்படி பெண் காவலர்கள் ஓய்வு இல்லதை பயன்படுத்தி பயனடையும் படி சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், சென்னை காவல் கூடுதல் ஆணையாளர் அஸ்ராகர்க் (வடக்கு), இணை ஆணையாளர்கள் அபிஷேக் தீட்சித், (வடக்கு மண்டலம்), நா.தேவராணி, (போக்குவரத்து வடக்கு) துணை ஆணையாளர் ஸ்ரேயா குப்தா, (பூக்கடை) உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post பெண் காவலர்கள் ஓய்வு இல்லத்தை திறந்து வைத்தார் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்! appeared first on Dinakaran.

Tags : Police Commissioner ,Sandeep Rai Rathore ,CHENNAI ,Commissioner of Police ,Chennai Metropolitan Police ,Lady Policemen's Rest Home ,Chennai Florist ,C-1 Pukkadai Police Station, Chennai ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...