×

வெடித்தது சர்ச்சை!: நடிகை நயன்தாராவின் “அன்னபூரணி” திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கம்..தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..!!

சென்னை: நடிகை நயன்தாரா நடித்துள்ளார் “அன்னபூரணி” திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவின் சமீபத்தைய ரிலீஸாக அவரின் 75வது படமான அன்னபூரணி திரைப்படம் டிச.1ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஒரு காட்சியில் ஜெய் நயன்தாராவிடம் “ராமர் கூட அசைவ உணவு சாப்பிட்டுள்ளார்” என்று பேசுவது போல இருக்கும். மேலும் ஒரு அர்ச்சகரின் மகளான நயன்தாரா நமாஸ் செய்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த காட்சிகளை குறிப்பிட்டு மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறப்பட்ட புகாரில் அன்னபூரணி படத்துக்கு எதிராக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை காவல் நிலையத்தில் சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி அளித்த புகாரில் நயன்தாரா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் மற்றும் அன்னபூரணி திரைப்பட குழு உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக விஷ்வ இந்து பரிஷத் குற்றம்சாட்டியிருந்தது. படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் கடிதம் எழுதிய நிலையில், “அன்னபூரணி” திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஜீ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், உங்களின் மேற்கூறிய கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளோம்.

மேலும் அதில் உள்ளவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளோம். இது தொடர்பாக, எங்கள் இணை தயாரிப்பாளர்களான எம் இன் இன்டென்ட் ஆர்டிஃபோவுடன் ஒருங்கிணைந்து, மேற்கூறிய திரைப்படம் தொடர்பான உங்கள் கவலைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மேலும் நெட்ஃபிளிக்ஸ் மூலம் படத்தைத் திருத்தும் வரை உடனடியாக அவர்களின் தளத்திலிருந்து அகற்ற சொல்லி இருக்கிறோம். இந்து மற்றும் பிராமணர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படத்தின் இணை தயாரிப்பாளர்கள் என்ற முறையில் எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை. மேலும் அந்தந்த சமூகத்தினரின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வெடித்தது சர்ச்சை!: நடிகை நயன்தாராவின் “அன்னபூரணி” திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கம்..தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nayanthara ,Netflix ,Chennai ,Nayantara ,Dinakaran ,
× RELATED 6 சொகுசு கார்களை வைத்திருக்கும் சமந்தா