×

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று 95,000 பேர் சாமி தரிசனம் செய்த நிலையில் இன்று பக்தர்கள் வருகை குறைவு.!

திருவனந்தபுரம் : சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்குள் வந்தது. நேற்று 95,000 பேர் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று காலை முதல் பக்தர்கள் வருகை 40,000 ஆக சரிவடைந்துள்ளது. நாளை எரிமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும், 13ம் தேதி பந்தளத்தில் இருந்து தங்க ஆபரண ஊர்வலம் புறப்பாடும் நடைபெற உள்ளது. மகரஜோதிக்கு 5 நாட்கள் இருக்கும் நிலையில், இன்று தேவசம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடத்த 27ஆம் தேதி மண்டல பூஜை முடிந்து நடை சாத்தப்பட்ட நிலையில் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 31ஆம் தேதி நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல், பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் சுமார் 12 முதல் 15 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் 18ஆம் படியேறி, ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். எனினும், ஒரு சில பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாமல் அடிவாரத்தில் உள்ள பம்பையிலே தங்களது விரதத்தை முடித்து வீடுகளுக்கு திரும்புவதாக வேதனை தெரிவிக்கின்றனர். வரலாறு காணாத பக்தர்கள் கூட்டத்தால் எரிமேலி , நிலக்கல் பம்பை போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று 95,000 பேர் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று காலை முதல் பக்தர்கள் வருகை 40,000 ஆக சரிவடைந்துள்ளது. நாளை எரிமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும், 13ம் தேதி பந்தளத்தில் இருந்து தங்க ஆபரண ஊர்வலம் புறப்பாடும் நடைபெற உள்ளது.

The post சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று 95,000 பேர் சாமி தரிசனம் செய்த நிலையில் இன்று பக்தர்கள் வருகை குறைவு.! appeared first on Dinakaran.

Tags : Sami ,Sabarimala Ayyappan temple ,Thiruvananthapuram ,Sabarimala ,Erimeli ,Bandalam ,
× RELATED ராணிப்பேட்டை அருகே உள்ள...