×

திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

குலசேகரம், ஜன.11: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கான தேவைகள் கண்டறியும் சிறப்பு முகாம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசி, யசோதா, அலுவலக மேலாளர் கிறிஸ்டோபர், மகளிர் திட்ட வட்டார மேலாளர் மரிய அகஸ்டினாள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஹெலன் சரோஜா, புஷ்பா, ஜோஸ்பின், வினு உட்பட பயனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் 172 மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள்,உதவி தொகை, முதியோர் உதவி தொகைக்கான மனுக்களை அளித்தனர்.

The post திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Tiruvattar Panchayat Union ,Kulasekaram ,Tamil Nadu Rural Livelihood Movement ,Thiruvatar panchayat union ,Panchayat Union ,President ,Jaganathan ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...