×

21ம் தேதி சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு இந்திய அரசியல் வரலாற்றில் இடம்பெறும் வகையில் உழைப்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்

சென்னை: விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
திமுக இளைஞர் அணி மாநாடு சேலத்தில் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டோம். மாநாட்டிற்கு முதல் நாள் மாலை தொடங்கி மாநாட்டு நாள் வரை நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள், முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசித்தோம். மாநில உரிமை மீட்பு முழக்கமாக நடைபெற இருக்கிற திமுக இளைஞரணி மாநாடு, இந்திய அரசியல் வரலாற்றில் இடம்பெற்றிடும் வகையில் அயராது உழைத்திடுவோம் என கூறியுள்ளார்.

The post 21ம் தேதி சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு இந்திய அரசியல் வரலாற்றில் இடம்பெறும் வகையில் உழைப்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Dimuka Youth Conference ,Salem ,Minister Assistant Secretary ,Stalin Dwight Chennai ,Minister of Sport Development Department ,Assistant Minister ,Stahini ,Dimuka Youth Team Conference ,Secretaries ,State ,Youth Team ,21st Dimuka Youth Conference ,Stalin Dwight ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...