×

ஜெகன் மோகனுடன் தெலுங்கு தேசம் எம்பி சந்திப்பு

திருமலை: விஜயவாடா தொகுதி தெலுங்கு தேசம் எம்பி கேசினேனி நானியும், அவரது மகளும் விஜயாவாடா 11 வது வார்டு கவுன்சிலருமான ஸ்வேதாவும் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகுவதாக 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். இந்நிலையில் நேற்று முதல்வர் ஜெகன்மோகனை முதல்வர் முகாம் அலுவலகத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேசினேனி நானி ஒய்எஸ்ஆர் காங்கிரசில் விரைவில் இணைந்து அரசியல் பயணம் செய்ய முடிவு செய்துள்ளேன். எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்றார். இதற்கிடையே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கிரிக்கெட் வீரர் அம்பதிராயுடு நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணை நேற்று அம்பதிராயுடு சந்தித்தார்.

The post ஜெகன் மோகனுடன் தெலுங்கு தேசம் எம்பி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Telugu Desam ,Jagan Mohan ,Tirumala ,Vijayawada ,Kesineni Nani ,councilor ,Swetha ,Telugu Desam Party ,Chief Minister ,Jaganmohan ,
× RELATED ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்;...